ஊட்டியில் உயர் மட்ட விளையாட்டு பயிற்சி மய்யம் அமைப்பேன் : பா.ஜ.க வேட்பாளர்

ஊட்டியில் உயர் மட்ட விளையாட்டு பயிற்சி மய்யம் அமைப்பேன் : பா.ஜ.க வேட்பாளர்
X
ஊட்டியில் உயர்மட்ட விளையாட்டு பயிற்சிமையம் அமைக்கப்படும் என்று பா.ஜனதா வேட்பாளர் போஜராஜன் உறுதியளித்தார்.

சட்டமன்றதொகுதி பா.ஜனதா வேட்பாளர் போஜராஜன் ஊட்டி தொகுதிக்கு உட்பட்ட சோலூர் கிராமத்தில் உள்ள ஊராட்டி, கோட்டடி, பிக்ககண்டி, ஆகிய இடங்களில் வீடு வீடாக சென்று கிராம மக்களிடம் வாக்கு சேகரித்தார்.

அப்போது பா.ஜ.க வேட்பாளர் போஜராஜன் பொதுமக்கள் மத்தியில் பேசும்போது மத்திய அரசுடன் அ.தி.மு.க. அரசு நல்லுறவு கொண்டு உள்ளதால் ஊட்டியில் மத்திய அரசு அனுமதியுடன் பிங்கர் போஸ்ட் பகுதியில் மருத்துவ கல்லூரி அமைக்கப்பட்டு கட்டுமான பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

மாவட்டம் முழுவதும்அனைத்து கிராமங்களிலும் இளைஞர்கள் கால்பந்து, ஆக்கி, கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளில் ஆர்வத்துடன் இருக்கிறார்கள்.

அவர்களுக்கு பயிற்சி அளிக்க மையம் இல்லை எனவே அவர்களுக்கு முறையான பயிற்சி அளிக்க ஊட்டியில் உயர் மட்ட விளையாட்டு பயிற்சிமையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்

நீலகிரிமாவட்டத்தில் படுகர் இன மக்கள் அதிகளவில் உள்ளனர் அவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பேன். எனவே அ.தி.மு.க -பா.ஜனதா கூட்டணி கட்சி வேட்பாளரான எனக்கு நீங்கள் தாமரை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறசெய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார். பிரசாரத்தில் பா.ஜனதா மாவட்ட தலைவர் மோகன்ராஜ், ஊட்டி ஊராட்சிஒன்றிய குழு தலைவர் மாயன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!