பாஜக வெறுப்பு அரசியல் செய்கிறது- தயாநிதி மாறன்

பாஜக வெறுப்பு அரசியல் செய்கிறது- தயாநிதி மாறன்
X

வெறுப்பு அரசியல் செய்து இந்துக்களின் வாக்குகளைப் பெற்று தமிழ்நாட்டில் காலூன்ற பாஜக நினைக்கிறது என குன்னூரில் தயாநிதி மாறன் கூறினார்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ராமச்சந்திரனை ஆதரித்து, தயாநிதிமாறன் எம்.பி., பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், "வெறுப்பு அரசியல் செய்து இந்துக்களின் வாக்குகளைப் பெற்று தமிழ்நாட்டில் காலூன்ற பாஜக நினைக்கிறது. அதிமுக குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை ஆதரித்தது. ஆனால், தற்போது மீண்டும் ஆட்சிக்கு வந்தால் குடியுரிமை சட்டத்தை எதிர்ப்போம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி சொல்கிறார்.அவர் தேர்தலுக்காக பொய் சொல்கிறார்.தமிழகத்தின் உரிமையை பாதுகாக்க திமுகவுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று கூறினார்.

மேலும் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்ற பின் நீலகிரி மாவட்ட சுற்றுலா தலங்களில் போக்குவரத்து நெரிசலை தடுப்பதற்கு குன்னூர் மற்றும் உதகையில் பார்க்கிங் வசதியை விரைவில் ஏற்படுத்தி தரப்படும் என்றும் தெரிவித்தார். மேலும் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு நிரந்தரமாக கான்கிரிட் வீடுகள் அமைத்து தரப்படும் என்றும் உறுதி அளித்தார்.

Tags

Next Story
why is ai important to the future