கோத்தகிரி அருகே காட்டு யானை தாக்கி இளைஞர் பலி

கோத்தகிரி அருகே காட்டு யானை தாக்கி இளைஞர் பலி
X

கோத்தகிாியில் காட்டுயானை தாக்கி உயிரிழந்த இளைஞா் ராஜ்குமார்.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி செம்மணாரை கிராமத்தில், காட்டு யானை தாக்கி இளைஞர் உயிரிழந்தார்.

நீலகிாி மாவட்டம் குன்னுாா் மற்றும் கோத்தகிாி பகுதிகளில் பலாப்பழம் சீசன் துவங்கியுள்ளது. இதனால் சமவெளி பகுதிகளில் இருந்தும், குன்னுாா் மற்றும் கோத்தகிாி பகுதிகளிலிருந்தும், காட்டுயானைகள் முகாமிட்டுள்ளன.

இந்நிலையிலில், கோத்தகிாி குஞ்சப்பணை அருகே உள்ள செம்மனாரை ஆதிவாசி கிராமத்தில் வசிக்கும் இருளா் ராமசாமி மகன் ராஜ்குமாா் வயது (26), அருகே உள்ள கோவிலுக்கு சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது புதரில் மறைந்திருந்த காட்டுயானை, அவரை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிாிழந்தார்.

இதுபற்றி அறிந்த அப்பகுதி மக்கள், வனத்துறையினருக்கு தகவல் அளித்தனா். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினா் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக கோத்தகிாி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இச்சம்பவம் குறித்து கோத்தகிாி போலீசாரும், வனத்துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Tags

Next Story
ai marketing future