கோத்தகிரி காந்தி மைதானத்தில் இளைஞர் அடித்துக் கொலை: போலீசார் விசாரணை

கோத்தகிரி காந்தி மைதானத்தில் இளைஞர் அடித்துக் கொலை: போலீசார் விசாரணை
X

அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ள இளைஞர்.

கோத்தகிரி காந்தி மைதானத்தில் இளைஞர் ஒருவரை அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோத்தகிரி மார்க்கெட்டில் மீன் கடையில் வேலை செய்து வருபவர் அஜய் 21. இவர் குன்னூர் எல்லநள்ளி பகுதியை சேர்ந்தவர் நள்ளிரவில் காந்தி மைதானத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் அடித்து கொல்லப்பட்டார். மேலும் கல்லால் முகத்தை சிதைத்து உள்ளனர் .

காலையில் நடைபயணம் மேற்கொண்டோர் இதுகுறித்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!