கோத்தகிரியில் யோகாசன போட்டி: மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு

கோத்தகிரியில் யோகாசன போட்டி: மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு
X
மாநில அளவில் யோகாசன பயிற்சியில் கலந்து கொள்ள தற்போது தேர்வு நடைபெற்று வருவதாக நீலகிரி யோகாசன அசோசியேஷன் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

கோத்தகிரி தனியார் அரங்கில் நீலகிரி மாவட்ட யோகாசன அசோசியேஷன் மற்றும் கோத்தகிரி லயன்ஸ் கிளப் சார்பில் மாவட்ட அளவில் யோகாசன போட்டி நடைபெற்றது.

இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாவட்ட யோகாசன சங்க தலைவர் போஜராஜன், செயலாளர் சுமதி மற்றும் லயன்ஸ் கிளப் தலைவர் கணேஷ் ,செயலாளர் கோபால், பொருளாளர் நந்தகுமார், முன்னாள் தலைவர்கள் ராஜ்குமார், மணிசேகர் பரமேஸ் மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கினர்.

இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் மாநில அளவிலான யோகாசன பயிற்சியில் கலந்து கொள்ளவார்கள் என தெரிவிக்கப்பட்டது. மேலும், லயன்ஸ் கிளப் சார்பில் யோகாசன மேட் வழங்கப்பட்டன.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!