கழுத்தில் காயத்துடன் சுற்றி திரிந்த காட்டெருமை மீட்பு

கழுத்தில் காயத்துடன் சுற்றி திரிந்த காட்டெருமை மீட்பு
X

கோத்தகிரி அருகே கழுத்தில் நைலான் கயிறு மாட்டி உயிருக்கு போராடிய காட்டெருமையை வனத்துறையினர் மீட்டனர்.

கோத்தகிரி அருகே கழுத்தில் நைலான் கயிறு மாட்டி உயிருக்கு போராடிய காட்டெருமையை வனத்துறையினர் மீட்டனர்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் சமீப காலமாக காட்டெருமை நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக குடியிருப்பு பகுதியிலும், தேயிலை தோட்டங்களிலும், சர்வ சாதாரணமாக உலா வருகிறது. இந்நிலையில் கோத்தகிரி அருகே உள்ள அணையட்டி கிராமத்தில் அருகே உள்ள தேயிலை தோட்டத்தில் நைலான் கயிறு கழுத்து இறுகிய நிலையில் காட்டெருமை சிக்கி உயிருக்கு போராடி தவித்து கொண்டிருந்தது.

உடனே அப்பகுதி மக்கள் கட்டபெட்டு வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த வனவர் பெலிக்ஸ் தலைமையிலான வனத்துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி காட்டெருமையின் கழுத்தில் இருந்த நைலான் கயிற்றை விடுவித்தனர். பின்னர் காட்டெருமை வனப்பகுதிக்குள் சென்றது. கிராம மக்கள் வனத்துறையினரை வெகுவாக பாராட்டினர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!