குன்னூரில் தேயிலைத் தோட்ட தொழிலாளியை தாக்கிய காட்டெருமை

குன்னூரில் தேயிலைத் தோட்ட தொழிலாளியை தாக்கிய காட்டெருமை
X

காட்டெருமை தாக்கியதில் படுகாயமடைந்த ராஜேந்திரனுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

குன்னூரில், தேயிலை தோட்டத்தில் ஒருவரை காட்டெருமை கழுத்தில் குத்தி தூக்கி வீசிய சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் 65% வனப்பகுதி கொண்ட மாவட்டமாகும். இங்குள்ள காடுகளில் யானை, கரடி, சிறுத்தை , காட்டுமாடுகள், செந்நாய்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள் உள்ளன. அவை அவ்வப்போது உணவு தேடியும், தண்ணீருக்காகவும் அடிக்கடி குடியிருப்பு பகுதிகளுக்கு வருகின்றன. இவ்வாறு வெளியே நடமாடும் வனவிலங்குகள், சில நேரங்களில் மனிதர்களை தாக்குவதால் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன.

இந்நிலையில், குன்னூர் அருகே உள்ள நான்சச் தேயிலை எஸ்டேடில் கண்காணிப்பாளராக பணிபுரியும் 58 வயது ராஜேந்திரன் என்பவரை, திடீரென்று காட்டெருமை தாக்கி தூக்கிவீசியுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது

கழுத்தில் காயமடைந்து ரத்தம் அதிகளவு வெளியேறிய நிலையில், ராஜேந்திரனுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காட்டெருமை தாக்குவது தொடர் கதையாக உள்ளதால், வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

.

Tags

Next Story
future of ai act