குன்னூர் அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் நுழைந்த காட்டெருமை கூட்டம்

குன்னூர் அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் நுழைந்த காட்டெருமை கூட்டம்
X

குன்னுார் அருவங்காடு வெடி மருந்து தொழிற்சாலை வளாகத்தில் இருந்த காட்டெருமைகளை வனத்துறையினர் விரட்டினர்.

நீண்ட நேர போராட்டத்துக்கு பின்பு தனித்தனியாக, 5 காட்டெருமைகளை அருகில் உள்ள வனப்பகுதிக்குள் விரட்டினர்.

நீலகிரி மாவட்டம் குன்னுார் அருவங்காடு பகுதியில், 15க்கும் மேற்பட்ட காட்டெருமைகள் குட்டிகளுடன் உலா வருகின்றன. இந்த காட்டெருமைகளால் தொழிலாளர் குடியிருப்பு மக்கள் அச்சமடைந்துள்ளனர். இவை, அவ்வப்போது காலை மற்றும் மாலை நேரத்தில் ஊட்டி சாலையில் உலா வருகிறது.

இந்நிலையில், காட்டெருமைகளை விரட்ட தொழிற்சாலை நிர்வாகம் சார்பில் வனத்துறைக்கு வலியுறுத்தியது. வனச்சரகர் சசிகுமார் உத்தரவின் பேரில், வனவர்கள் ராஜ்குமார், சபரி ஆகியோர் தலைமையில் வனத்துறையினர் வெடிமருந்து தொழிற்சாலை தீயணைப்பு துறை உதவியுடன் விரட்டினர்.

இதில், குட்டியுடன் 8 காட்டெருமைகளை விரட்டினர். இந்நிலையில், மேலும் இருந்த 5 காட்டெருமைகளை விரட்டிய போது மாற்று பாதையில் சென்றது‌. அப்போது தொழிற்சாலை வளாகத்தில் சாலையோரத்தில் இருந்தவர்கள் ஓட்டம் பிடித்தனர். தொடர்ந்து புதருக்குள் மறைந்தது. நீண்ட நேர போராட்டத்துக்கு பின்பு, தனித்தனியாக 5 காட்டெருமைகளை அருகில் உள்ள வனப்பகுதிக்குள் விரட்டினர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!