கோவை, மஞ்சூர் பேருந்தை வழிமறித்த காட்டு யானைக் கூட்டம்

கோவை, மஞ்சூர் பேருந்தை வழிமறித்த காட்டு யானைக் கூட்டம்
X

அரசு பேருந்தை வழிமறித்த காட்டுயானைகள்.

மஞ்சூர், கோவை கெத்தை சாலையில் 4 யானைகள் கொண்ட கூட்டம் வழிமறித்ததால் 1 மணி நேரம் பாதிப்பு.

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் முதல் கோவை செல்லும் ஐம்பது கிலோ மீட்டர் சாலை கெத்தை வனப்பகுதியை கடந்து செல்லும் சாலையாக உள்ளது. அடர்ந்த வனப்பகுதிகளை கொண்ட இங்கு யானை, புலி, சிறுத்தை, கரடி உள்ளிட்ட வன விலங்குகள் நிறைந்த பகுதியாக உள்ளது.

இந்த வனப்பகுதியின் வழியாக நாற்பத்தி எட்டு கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட மலை பாதையாக உள்ளது. கேரளா, கோவை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து அதிகளவில் வாகனங்கள் வந்து செலகின்றன. கடந்த ஒரு வார காலமாக மஞ்சூர் கோவை சாலையில் குட்டியுடன் காட்டுயானைகள் முகாமிட்டுள்ளன.

இந்த நிலையில் மஞ்சூரிலிருந்து கோவைக்கு இன்று மாலை புறப்பட்ட அரசு பேருந்து கெத்தை அருகே வந்த போது காட்டுயானைகள் வழிமறித்தது. பேருந்திலிருந்த பயணிகள் அச்சம் அடைந்தனர். சற்று தூரம் சாலையில் நடந்து சென்ற காட்டுயானைகள் வனப்பகுதிக்குள் சென்றது. இதனால் பேருந்து பயணிகள் நிம்மதியடைந்தனர். பின்னர் பேருந்து அங்கிருந்து புறப்பட்டு கோவை சென்றது இதனால் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story