குன்னூர் நகரில் உலா வந்த காட்டு எருமை

குன்னூர் நகரில் உலா வந்த காட்டு எருமை
X

நகருக்குள் உலா வரும் காட்டு எருமை.

குன்னூரில் இரவில் குடியிருப்பு பகுதிக்குள் சர்வசாதாரணமாக உலா வந்த காட்டெருமையால் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் அண்மைக்காலமாக காட்டு எருமைகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக உணவு மற்றும் தண்ணீரை தேடி குடியிருப்பு மற்றும் சாலைகளில் காட்டெருமைகள் உலா வருவது வாடிக்கையாக உள்ளது . இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு எருமை வழிதவறி குன்னூர் நகர பகுதியில் அதிக மக்கள் வசிக்ககூடிய ரெய்லி காம்போண்ட், மாடல்ஹவுஸ் பகுதியில் அங்கும் இங்கும் உலா வந்தது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் காட்டு எருமை உலா வந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அந்த பகுதியில் உள்ள இளைஞர்கள் காட்டு எருமையை விரட்டியும், அங்கு இருந்து செல்லாமல் அந்த பகுதியில் உள்ள குழந்தைகள் பூங்காவுக்குள் காட்டெருமை புகுந்து முகாமிட்டுள்ளது. இந்த சம்பவத்தால் சுமார் 2 மணிநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
ai marketing future