கோத்தகிரி அருகே வழி தவறி வீட்டின் மீது ஏறிய காட்டுமாடு - பரபரப்பு

கோத்தகிரி அருகே வழி  தவறி வீட்டின் மீது ஏறிய காட்டுமாடு - பரபரப்பு
X

கட்டபெட்டு கிராமத்தில் வீட்டின் கூரை மீது ஏறிய காட்டெருமையால் மக்கள் அச்சமடைந்தனர். 

கட்டபெட்டு கிராமத்தில் வீட்டின் கூரை மீது ஏறிய காட்டெருமை இரண்டு மணி நேரம் போராடி வீட்டின் கூரையில் இருந்து இறங்கியது

நீலகிரி மாவட்டத்தில் அண்மைக்காலமாக காட்டெருமைகள் வனப் பகுதிகளில் இருந்து வெளியேறி கிராமப்பகுதிகளில் உலா வருகிறது.

இந்நிலையில் உதகையில் இருந்து கோத்தகிரி செல்லும் மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது கட்டபெட்டு கிராமத்தில், அதிகாலை 3 மணி அளவில் காட்டெருமை ஒன்று வீட்டின் கூரை மீது ஏறி உள்ளது .அவ்வாறு வீட்டின் கூரை மீது ஏறிய காட்டெருமையால் இறங்க முடியாமல் தவித்து வந்தது.

2 மணிநேரம் வீட்டின் கூரை மீது நின்ற காட்டெருமை அதிகாலை 5 மணி அளவில் கூரையின் மீது இருந்து எகிறி குதித்து தப்பி ஓடியது. இந்த காட்சி சமூக ஊடகங்களில் பரவலாக பரவி வருகிறது. இதனால், பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

Tags

Next Story
சத்தியமங்கலம் : உச்சம் தொட்ட மல்லிகை பூ..!அதிர்ச்சியில் மக்கள்