குன்னூர் அருகே கேத்தி பகுதியில் சேற்றில் சிக்கிய காட்டெருமை மீட்பு

குன்னூர் அருகே கேத்தி பகுதியில் சேற்றில் சிக்கிய காட்டெருமை மீட்பு
X

காட்டெருமை.

கேத்தி பகுதிகளில் அதிகளவிலான காட்டெருமைகள் உலா வருவதால் மக்கள் கவனமுடன் இருக்க வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.

உதகை அருகே உள்ள கேத்தி சாந்தூர் பகுதியில் உள்ள விளை நிலத்தில் சேற்றில் சிக்கிக்கொண்ட காட்டெருமை இரண்டு மணி நேரப் போராட்டத்திற்குப் பின் மீட்கப்பட்டது.

உதகை அருகே கேத்தி பகுதியில் காட்டெருமை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது.

தற்போது குடியிருப்பு பகுதிகளிலும் நடமாடி வருகிறது கேத்தி சாந்தூரில் விளைநிலங்களை ஒட்டி காட்டெருமை ஒன்று மேய்ச்சலில் ஈடுபட்டிருந்த போது விளைநிலம் அருகே இருந்த சேற்றில் காட்டெருமையின் கால்கள் சிக்கியது.

இதனால் காட்டெருமையால் வெளியே வர முடியவில்லை. இதுகுறித்து தகவலறிந்த குந்தா வனச்சரகத்தினர் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர்.

காட்டெருமையை கயிறு மீட்க முயன்றனர். 2 மணி நேரத்திற்கு பின்னர் காட்டெருமை மீட்கப்பட்டது.

வனத்துறையினர் கூறிய போது 14 வயதான ஆண் காட்டெருமை என்றும் காட்டெருமை நடமாட்டம் அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!