குன்னூரில் ரயில் மறியலில் ஈடுபட்ட விசிகவினர் கைது

குன்னூரில் ரயில் மறியலில் ஈடுபட்ட விசிகவினர் கைது
X

ரயில் மறியலில் ஈடுபட்ட விசிகவினர்.

மலை ரயில் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி ரயில் மறியலில் ஈடுபட்ட 20 க்கும் மேற்பட்ட விசிகவினரை போலீசார் கைது செய்தனர்.

நீலகிரி மாவட்டம் குன்னுார் ரயில் நிலையத்திலிருந்து உதகை வரை செல்ல கடந்த காலங்களில் இரண்டாம் வகுப்பு கட்டணம் 10 ரூபாயும், முதல் வகுப்பு கட்டணம் 50 ரூபாயும் வசூலிக்கப்பட்டு வந்தது.

தற்போது முதல் வகுப்பு கட்டணம் 350 ரூபாயும், இராண்டாம் வகுப்பு கட்டணம் 150 ரூபாயும் வசுலிக்கப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கையால் குன்னுார் ரயில் நிலையத்திலிருந்து சாதாரண மக்கள் மலை ரயிலில் பயணம் செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

குன்னுாரிலிருந்து உதகைக்கு ரயில் மூலம் கூலி தொழிலாளர்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வந்தவர்கள் தற்போது மிகவும் பாதிப்பு உள்ளாகியுள்ளனர். எனவே சாதாரண ஏழை, எளிய மக்கள் மலை ரயிலை பயன்படுத்த கூடிய சூழலை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ரயில் கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தி, குன்னுார் சட்ட மன்ற தொகுதி செயலாளர் சுதாகர் தலைமையில் குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் வரை செல்லும் மலை ரயிலை மறிக்கும் பேராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்பேராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த 20 க்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த ரயில் மறியலில் மாவட்ட பொருளாளர் மண்ணரசன், மேலுார் ஒன்றிய செயலாளர் ஜெயபால், ஒன்றிய செயலாளர் பாபு, குன்னுார் நகர பொறுப்பாளர் பாரூக், ராமகிருஷ்ணன் நகர பெறுப்பாளர் இளம் சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை, உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
why is ai important to the future