உதகை மேட்டுப்பாளையம் மலை ரயில் சேவை மீண்டும் இயக்கம்

உதகை மேட்டுப்பாளையம் மலை ரயில் சேவை மீண்டும் இயக்கம்
X

மலை ரயில்.

குன்னூர் உதகை இடையே நாளை முதல் (22ந் தேதி) உதகை-மேட்டுப்பாளையம் மலை ரயில் சேவை மீண்டும் இயக்கம்.

உதகையில் இருந்து கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திற்கு குன்னூர் வழியாக மலை ரெயில் சேவை இயக்கப்பட்டு வந்தது கடந்த தினங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பெய்ததால்,-குன்னூர் மேட்டுப்பாளையம் இடையே ரயில் பாதையில் ஆங்காங்கே மண்சரிவு ஏற்பட்டது. மேலும் பாறைகள் உருண்டு விழுந்ததில் தண்டவாளம் சேதமடைந்தது.

இதனால் உதகை மேட்டுப்பாளையம் இடையே மலை ரயில் சேவை முற்றிலும் ரத்து செய்யப்பட்டது. இதைதொடர்ந்து மலை ரயில் பாதையில் விழுந்து கிடந்த மண்ணை அகற்றும் பணி நடந்தது. மேலும் பாறைகள் உடைத்து அப்புறப்படுத்தப்பட்டன. இதற்கிடையே கல்லார்-குன்னூர் இடையே அவ்வப்போது மண் சரிந்து விழுந்தது. அதனுடன் மரங்களும் முறிந்து விழுந்தன. இதை சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்தது. இதனால் உதகை மேட்டுப்பாளையம்- இடையே மலை ரயில் சேவை ரத்து நீட்டிக்கப்பட்டது.

தற்போது ரயில் பாதையில் சேதமடைந்த தண்டவாளங்கள் சீரமைக்கப்பட்டு பணிகள் முடிந்து உள்ளன. இந்த நிலையில் நேற்று குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு மலை ரயில் சோதனை ஓட்டம் நடந்தது. 1½ மாதத்துக்கு பின்னர் மலை ரயில் இயக்கப்பட இருப்பதால் தண்டவாளம் பாதுகாப்பாக உள்ளதா என்று சோதனை மேற்கொள்ளப்பட்டது.

கிருஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டையொட்டி சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் வர உள்ளனர். இதனை கருத்தில் கொண்டு தென்னக ரயில்வே நாளை (22-ந் தேதி) முதல் உதகை மேட்டுப்பாளையம் இடையே மீண்டும் மலை ரயில் சேவை நாளை தொடங்க இருப்பதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

மேலும் தற்போது தொடர்ந்து தினந்தோறும் வழக்கம்போல் உதகை- குன்னூர் இடையே தினமும் 3 முறை மலை ரயில் சேவை இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
ai marketing future