குன்னூரிலிருந்து புறப்பட்ட ராணு வீரர்களின் இருசக்கர பேரணி

குன்னூரிலிருந்து புறப்பட்ட ராணு வீரர்களின் இருசக்கர பேரணி
X

குன்னூரிலிருந்து புறப்பட்ட ராணு வீரர்களின் இருசக்கர பேரணி.

குன்னூர் மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டரின் 263வது ஆண்டு தினத்தையொட்டி ராணுவ வீரர்களின் இருசக்கர வாகன பேரணி துவங்கியது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமெண்டின் 263-வது ஆண்டு தினம் டிசம்பர் 4ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதன் நினைவு கூறும் வகையில் ஸ்வர்னிம் விஜய்வர்ஸ் மற்றும் ஆசாதி கா அம்ரித் மகாட்சவ் இருந்து என்ற இருசக்கர வாகன பேரணி இன்று குன்னூர் வெலிங்டன் ராணுவ மையத்தில் துவங்கியது.

ஓய்வு பெற்ற பிரிகேடியர் அஜித்சிங், தலைமையில் மெட்ராஸ் ரெஜிமெண்டின் 263-வது எழுச்சி தின பேரணியை துவக்கி வைத்தார். இப்பேரணியில் கலந்து கொண்ட ராணுவ அதிகாரிகள் மற்றும் இருசக்கர வாகன ராணுவ வீரர்கள் கேரளாவின் திருவனந்தபுரத்திற்கு சென்றடைவார்கள்.

இதேபோல கொல்கத்தா, ஜாம்நகர், சென்னை மற்றும் செகந்திரபாத் ஆகிய இடங்களில் இருந்தும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மெட்ராஸ் ரெஜிமெண்ட் பெட்டாலியன்களில் இருந்தும் ராணுவ வீரர்களின் இரு சர்க்கர வாகன பேரணியில் இணைவார்கள். தொடர்ந்து இந்திய ராணுவத்தின பழைமையான படைப்பிரிவின் 263வது எழுச்சி நாளான டிசம்பர் 4ம் தேதியன்று, இந்த குழுவினர் திருவனந்தபுரத்தில் ஒன்று கூடுவர்.

அங்கு இருசக்கர வாகன ஓட்டிகளின் பேரணி கொடி ஏற்றுக் கொள்ளப்பட உள்ளது. இந்த விழாவில் 1971 ம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் போரின் தியாகிகளின் வீர விருது பெற்ற அவர்களின் குடும்பத்தார் கவுரவிக்கப்பட உள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!