/* */

கோத்தகிரியில் கயிறு இறுக்கி காயமடைந்த காட்டெருமைக்கு சிகிச்சை

கோத்தகிரியில் கழுத்தில் காயமடைந்த காட்டெருமைக்கு மயக்க ஊசி செலுத்தி சிகிச்சை அளித்த வனத்துறையினர்.

HIGHLIGHTS

கோத்தகிரியில் கயிறு இறுக்கி  காயமடைந்த காட்டெருமைக்கு சிகிச்சை
X

காயமடைந்த காட்டு மாட்டுக்கு மயக்க ஊசி செலுத்திய காட்சி.

கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் காட்டெருமைகள் அதிகமாக குடியிருப்பு பகுதிக்குள் உலா வருகின்றன. இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு காட்டெருமை ஒன்று கழுத்தில் கயிறு மாட்டி உள்ளது. இதை பார்த்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர் .இதனையடுத்து வனத்துறையினர் தொடர்ந்து காட்டெருமையை தேடும் பணியில் ஈடுபட்டனர். பின்பு அணையட்டி பகுதியில் காட்டெருமை இருப்பதாக தகவல் அறிந்து அங்கு சென்ற மாவட்ட வனக் காப்பாளர் குருசாமி தபேலா , வனத்துறையினர், மருத்துவக் குழுவுடன் காட்டு மாட்டுக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது. இதன் பின்னர் காட்டெருமை கழுத்தில் சுற்றி இருந்த கயிற்றை அவிழ்த்துவிட்டு காயத்திற்கு சிகிச்சை அளித்தனர். மேலும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்பு, காட்டெருமை மூன்று மணி நேரம் தேயிலை தோட்டத்தில் உலா வந்தது. வனத்துறையினர் தொடர்ந்து காட்டெருமையை கண்காணித்து வருகின்றனர் .

Updated On: 9 Aug 2021 8:53 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  2. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  3. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  4. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  5. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  6. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!
  8. லைஃப்ஸ்டைல்
    காத்திருப்பது என்பது பொறுமையைப் பெறுவதற்கான ஒரு வழி
  9. லைஃப்ஸ்டைல்
    கர்ணன் கொண்ட தோழமைக்காக ஆவி தன்னைத் தந்தானே! அது தான் நட்பின்...
  10. வீடியோ
    🔴LIVE : Annamalai-யை படம் பார்க்க அழைத்தேன் | Ameer பகீர் தகவல் |...