குன்னூரில் உணவு பாதுகாப்புத்துறை சார்பில் பயிற்சி முகாம்
நீலகிரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பில், உணவுப் பொருட்களை பாதுகாப்பாக விற்பது குறித்து வியாபாரிகளுக்கு பயிற்சி முகாம் குன்னூரில் உள்ள விவேக் ஓட்டலில் நடைபெற்றது.
முகாமுக்கு மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சுரேஷ் தலைமை வகித்தார். வியாபாரிகள் சங்க தலைவர் பரமேஸ்வரன், குன்னூர் தாலுகா உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமில், பொட்டலம் இடப்பட்ட பொருட்களின் மீது உணவின் பெயர், உற்பத்தியாளர் பெயர் மற்றும் முழு முகவரி, தயாரித்த தேதி, நிகர எடை, பயன்படுத்தக்கூடிய தேதி, காலாவதி தேதி, ஊட்டசத்து விவரம், உணவு சேர்க்கைகள் அளவு, நுகர்வோர் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்கள் லேபிளில் இடம் பெற்றிருக்க வேண்டும்.இதனை சரிபார்த்து வாங்கி நுகர்வோர்களுக்கு விற்பனை செய்ய வேண்டும். ஒருமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெய்யை மறுசுழற்சி செய்வதன் பயன்பாடு குறித்து விரிவாக விளக்கப்பட்டது. முகாமில் உணவக உரிமையாளர்கள், பேக்கரி உரிமையாளர்கள் 76 பேர் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu