நீலகிரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

நீலகிரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
X

தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்.

நீலகிரி மாவட்டத்திற்கு இன்று 21, 839 க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகை புரிந்துள்ளனர்.

நீலகிரியில் இரண்டாம் சீசன் துவங்கியுள்ள நிலையில் நீலகிரி மாவட்டத்திற்கு அனைத்து பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிந்துள்ளனர். ஊட்டி, குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்களை காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை தொடர் விடுமுறையையொட்டி சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்பட்டது. அதன்படி சுற்றுலா பயணிகள் வருகை கல்லார் 260, காட்டேரி பூங்கா 682, டீ பார்க் தொட்டபெட்டா 1001 , ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா 11070, ரோஜா பூங்கா 5208, குன்னூர் சிம்ஸ் பார்க் 3440, ஆர் போரேடம் 142 என நீலகிரி மாவட்டத்தில் இன்று 21, 839 க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகை புரிந்துள்ளனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!