தொடர் விடுமுறையால் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்

தொடர் விடுமுறையால் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
X

தொடர் விடுமுறையொட்டி, குன்னூர் சிம்ஸ் பூங்காவிற்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. 

விடுமுறை நாளான இன்று, நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவிற்கு, அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர்.

கொரோனா இரண்டாம் அலை சற்று குறைந்த நிலையில், கடந்த மாத இறுதியில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் திறக்கப்பட்டன. இதன் காரணமாக, தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களுக்கு இருந்து சுற்றுலா பயணிகள் நீலகிரி மாவட்டத்திற்கு வரத்துவங்கியுள்ளனர்.

இந்நிலையில், வினாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மூன்று நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் வீடுகளில் முடங்கியிருந்த மக்கள், தற்போது நீலகிரி மாவட்டத்திற்கு படையெடுத்து வருகின்றனர்.

குன்னூரில் உள்ள சிம்ஸ் பூங்காவில், இன்று காலை முதல் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது. சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வருகை தந்துள்ளனர். கொரோனா இரண்டாம் அலை குறைந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனால் சுற்றுலா பயணிகளை நம்பியுள்ள வணிகர் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நீண்ட காலம் கழித்து சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால், பூங்கா ஊழியர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!