கோத்தகிரி நெடுஞ்சாலையில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து

கோத்தகிரி நெடுஞ்சாலையில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து
X

வேன் கவிழ்ந்த இடத்தில் போலீசார் விசாரணை நடத்தினர்.

Tourist van overturns on Kotagiri highway

கடந்த 5 நாட்களுக்கு முன் ஆந்திர மாநிலம் கடப்பாவில் சுதர்சன் ரெட்டி என்பவர் குடும்பத்துடன் நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் வந்துள்ளனர்.

இவர்கள் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா ஸ்தலங்களை பார்த்து விட்டு கோத்தகிரி மலைப்பாதை வழியாக மேட்டுப்பாளையம் செல்லும் போது தட்டப்பள்ளம் அருகே வாகனம் சென்று கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையோர தடுப்பில் மோதி விபத்திற்குள்ளானது.

விபத்தில் வாகனத்தில் பயணித்த நான்கு குழந்தைகள் உட்பட மொத்தம் ஏழு நபர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டு 108 மற்றும் தனியார் ஆம்புலன்ஸ்கள் மூலம் கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக கோத்தகிரி போக்குவரத்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக கோத்தகிரி மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் கடந்த இரண்டு வாரங்களில் நான்காவது முறையாக சுற்றுலா வாகனம் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்: ஈரோட்டில் 170 பேர் கைது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல்