நீலகிரியில் சுற்றுலா தலங்கள் மூடப்படாது: கலெக்டர்
ஸ்கேன் சென்ட்ரை திறந்து வைத்த கலெக்டர் இன்னசென்ட் திவ்யா.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ஓட்டுபட்டரை பகுதியில் உள்ள நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிதாக 6.50 லட்சம் மதிப்பீட்டில் கர்ப்பிணிகளுக்கான ஸ்கேன் சென்டரை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா இன்று நேரில் திறந்து வைத்தார். தொடர்ந்து குன்னூர் மருத்துவமனைக்கு வரக்கூடிய கர்ப்பிணி பெண்கள் ஸ்கேன் எடுக்க உதகை சென்று வந்தனர். தற்போது தன்னார்வலர்கள் உதவியுடன் புதிதாக குன்னூரில் புதிய ஸ்கேன் சென்டர் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் இனி வரும் காலங்களில் கர்ப்பிணி பெண்கள் பயன் அடைவார்கள் என்று தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர், கொரோனா தொற்று இருந்த போதிலும் சுற்றுலா பயணிகளை நம்பி மக்களின் வாழ்வாதாரம் இருப்பதால் ஒரு போதும் சுற்றுலா தலங்கள் மூடப்படமாட்டாது. தொடர்ந்து சமூக இடைவெளி முக கவசங்கள் அணிய கட்டாயப்படுத்தும்.
கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் நீலகிரி மாவட்ட எல்லையில் தீவிரமாக கண்காணித்து வரப்படுகிறது. இரண்டு தவணை தடுப்பூசி மற்றும் கொரோனா நெகடிவ் சான்றிதழ் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் உணவு நேரத்தினை தவிர மற்ற அனைத்து நேரத்திலும் முக கவசங்கள் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu