நீலகிரி மஞ்சூரில் புலி தாக்கி பசு உயிரிழப்பு: பாெதுமக்கள் அச்சம்
கெத்தை ஆற்று பகுதியில் புலி தாக்கியதில் இறந்த பசுமாடு.
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே கெத்தை அணை பகுதியில் மின் நிலையம் உள்ளது. அங்கு வனப்பகுதிகளில் காட்டு யானை, புலி, சிறுத்தை, காட்டெருமை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.
மாரிச்சாமி என்பவரின் பசுமாடு கெத்தை ஆற்று பகுதியில் மேய்ச்சலில் ஈடுபட்டு கொண்டிருந்தது. அப்போது பாறை இடையே மறைந்திருந்த புலி பசு மாட்டின் கழுத்தை கடித்து குதறியது. இதில் பசு மாடு பரிதாபமாக இறந்தது.
இது குறித்து தகவலறிந்த குந்தா வனச்சரகர் சீனிவாசன் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். கால்நடை டாக்டர் வரவழைக்கப்பட்டு இறந்த பசு மாட்டின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
அப்போது புலி அடித்து கொன்ற பசுமாடு சினையாக இருந்தது தெரியவந்தது. பசுமாட்டை புலி அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புலி நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu