மது போதையில் அடுத்தவர் வீட்டில் அத்துமீறி புகுந்த முன்னாள் எம்பிக்கு அடி, உதை

மது போதையில் அடுத்தவர் வீட்டில் அத்துமீறி புகுந்த முன்னாள் எம்பிக்கு அடி, உதை
X

அதிமுக முன்னாள் எம்பி கோபாலகிருஷ்ணன்.

குடித்துவிட்டு அடுத்தவரின் வீட்டில் புகுந்த அதிமுக முன்னாள் எம்பிக்கு அடி, உதை.

குடித்துவிட்டு அடுத்தவரின் வீட்டில் புகுந்த அதிமுக முன்னாள் எம்பிக்கு அடி, உதை.

கடந்த அதிமுக ஆட்சியில் நீலகிரி தொகுதி மக்களவை எம்.பி.யாக கோபால கிருஷ்ணன் இருந்தார். இவர் நகராட்சி தலைவராகவும் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அதிமுக முன்னாள் எம்பி கோபாலகிருஷ்ணன் மது போதையில் முத்தாலம்மன் பேட்டை பகுதியில் உள்ள ஒருவரின் வீட்டிற்குள் புகுந்ததாக கூறப்படுகிறது.

உடனடியாக அந்த வீட்டின் உரிமையாளர் முன்னாள் எம்பி யை சரமாரியாக தாக்கியுள்ளனர். பின்னர் அவர் நிர்வாணமாக இருப்பதை அவர்கள் வீடியோ பதிவு செய்துள்ளனர். உடனடியாக குன்னூர் நகர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளனர். முன்னாள் அதிமுக எம்பி கோபாலகிருஷ்ணன் தன்னை தாக்கியதாக கூறி இன்று குன்னூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து இருவரையும் விசாரணை நடத்திய காவல்துறையினர் வீட்டிற்குள் குடிபோதையில் தகாத வார்த்தை பேசிய முன்னாள் எம்பி கோபாலகிருஷ்ணன் மீதும், அவர் மீது தாக்குதல் நடத்திய வீட்டின் உரிமையாளர் கோபி மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதிமுக முன்னாள் எம்பி மது போதையில் அடுத்தவரின் வீட்டிற்குள் இருந்த சம்பவம் நீலகிரி அதிமுகவில் பெறும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.‌

Tags

Next Story
ai in future agriculture