தேயிலை தோட்டத்தில் பிறந்த குட்டிக்கு வழி ஏற்படுத்திய தாய் யானை; நெகிழ்ச்சி சம்பவம்
ஈன்ற குட்டியை அழைத்துச்செல்லும் தாய் யானை.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து காணபடுகிறது. குறிப்பாக குன்னூர் வன பகுதிக்கு வந்துள்ள யானைகள் தேயிலை தோட்டங்களில் முகாமிட்டு வருகின்றன.
குன்னூர் அருகே சேலாஸ் பகுதிக்கு வந்துள்ள 6 யானைகள் கொண்ட ஒரு யானை கூட்டம் 3 நாட்களாக தனியார் எஸ்டேட் பகுதியில் முகாமிட்டு உள்ளன. இந்த யானை கூட்டத்தால் தேயிலை பறிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அந்த யானை கூட்டத்தில் கருவுற்றிருந்த ஒரு பெண் யானை ஒரு குட்டியை ஈன்றுள்ளது. அந்த குட்டி, பிச்சு குழந்தையை போல எழுந்து நடக்க முடியவில்லை. இதனை அறிந்த தாய் யானை குட்டியை மெல்ல மெல்ல தேயிலை தோட்டத்திற்குள் அழைத்து வந்தது.
மேலும் குட்டி நடந்து செல்ல வழியில் இருந்த குச்சிகளையும் தனது தும்பி கையால் தூக்கி வீசியவாறு அழைத்து சென்றது. இந்த காட்சிகள் தற்போது சமூக வலை தலங்களில் வைரலாக பரவி வருகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu