சிறுமியை திருமணம் செய்த நபர் போக்சோவில் கைது

சிறுமியை திருமணம் செய்த நபர்  போக்சோவில் கைது
X
சிறுமிக்கு 18 வயது பூர்த்தி அடையாதது தெரிய வந்ததை அடுத்து ஊட்டி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கப்பட்டது

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே கோத்தகிரியில் சிறுமியை திருமணம் செய்த இளைஞரை போலீசார் போக்சோ வழக்கில் போலீஸார் கைது செய்தனர்.

கோத்தகிரி அருகே கட்டபெட்டு பகுதியில் உள்ள பெட்டமந்து பகுதியை சேர்ந்த நித்தேஷ்குட்டன்(22,) என்பவருக்கும் ஊட்டி தலைகுந்தா பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் பெற்றோர் திருமணத்திற்கு நிச்சயம் செய்துள்ளனர்.

ஆனால், கர்ப்பிணியான அந்த சிறுமியை பிரசவத்திற்காக ஊட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மருத்துவமனை நிர்வாகம் சமூக நலத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். விசாரணையில், சிறுமிக்கு 18 வயது பூர்த்தி அடையாதது தெரிய வந்ததை அடுத்து ஊட்டி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கப்பட்டது.இதைத்தொடர்ந்து, நித்தேஷ்குட்டன் மீது குழந்தை திருமண சட்டம் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இந்நிலையில், நித்தேஷ்குட்டனுக்கு திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக ஊட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!