குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து நடந்த பகுதியில் இராணுவம்சார்பில நிழற்குடை

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து நடந்த பகுதியில் இராணுவம்சார்பில நிழற்குடை
X

தென்பிராந்திய ஜெனரல் ஆபிசர் கமாண்டிங் லெப்டினன்ட் ஜெனரல் அருண் 

தென்பிராந்திய ஜெனரல் ஆபிசர் கமாண்டிங் லெப்டினன்ட்ஜெனரல் அருண் கலந்துகொண்டு அப்பகுதிமக்களுக்கு நலத்திட்டஉதவிகள் வழங்கினார்

ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்ட குன்னூர் நஞ்சப்ப சத்திரம் கிராமத்தில் அமைக்கப்பட்ட நிழல்குடை திறப்பு விழாவில் தென்பிராந்திய ஜெனரல் ஆபிசர் கமாண்டிங் லெப்டினன்ட் ஜெனரல் அருண் பங்கேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நஞ்சப்ப சத்திரம் பகுதியில் கடந்த டிசம்பர் 8ம் தேதி ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் முப்படை தளபதி பிபின் ராவத் உட்பட 14 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து ஏற்பட்ட போது நஞ்சப்ப சத்திரம் பகுதி மக்கள் தங்களது வீடுகளில் உள்ள போர்வை உள்ளிட்ட பொருட்கள் வழங்கியும், விபத்தில் சிக்கி இருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இவர்களுக்கு ராணுவம் சார்பில் கடந்த டிசம்பர் 13ம் தேதி, நன்றி தெரிவித்து, ஒருவருட காலத்திற்கு ராணுவம் சார்பில் மருத்துவ முகாம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து, இரு மாதங்களில் இருமுறை மருத்துவ முகாம் நஞ்சப்பசத்திரம் கிராமத்தில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. இந்த நிலையில் கிராம மக்களின் பயனுக்காக ராணுவம் அமைத்த புதிய நிழற்கூரை திறப்பு விழா மற்றும் சிறப்பு மருத்துவமுகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

திறப்பு விழாவில் தென்பிராந்திய ஜெனரல் ஆபிசர் கமாண்டிங் லெப்டினன்ட் ஜெனரல் அருண் கலந்து கொண்டு, விபத்தின்போது மீட்பில் உதவிய சந்திரன் என்பவரை அழைத்து, நிழற்கூரையை திறக்க வைத்தார். இதற்கான கல்வெட்டை, வண்டிச்சோலை பஞ்சாயத்து தலைவி மஞ்சுளா திறந்து வைத்தார். தொடர்ந்து கிராம மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.


Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!