பட்டப்பகலில் ஊருக்குள் நுழைந்த கரடி; வனத்துறை அலட்சியத்தால் மக்கள் அச்சம்

பட்டப்பகலில் ஊருக்குள் நுழைந்த கரடி;  வனத்துறை அலட்சியத்தால் மக்கள் அச்சம்
X

சக்கத்தா கிராமத்தில் உள்ள காேவிலுக்குள் நுழையும் கரடி.

குன்னூர் அருகே கோயிலில் நுழைந்த கரடி அங்கிருந்த எண்ணெய் மற்றும் ஆடைகளை சேதம் செய்து மக்களை அச்சுறுத்தியது.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள சக்கத்தா கிராமத்தில், சமீப காலமாக வனவிலங்குகள் ஊருக்குள் உலா வருவது வாடிக்கையாக உள்ளது.

தற்போது விளையக்கூடிய பேரிக்காய், நாவல் பழம் ஆகியவற்றை உண்பதற்காக தேயிலை தோட்டம் மற்றும் சாலையோர பகுதிகளில் கரடிகள் வந்து செல்கின்றன.

இந்நிலையில், இன்று சக்கத்தா கிராமத்தில் உள்ள கோவிலில் உள்ள எண்ணையை குடிப்பதற்காக பகல் நேரத்திலேயே கோவிலினுள் நுழைந்தது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் விளைவை அறியாமல் கரடியை தங்களின் கைப்பேசியில் புகைப்படம் எடுத்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டனர்.

திடீரென கரடி பொதுமக்களை துரத்துவது போல் கத்தியது. இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து கோத்தகிரி பகுதிகளில் அரங்கேறி வருகிறது. மேலும் கரடிகளை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை மெத்தனம் காட்டுவது ஏன் என்ற கேள்வியும் பொது மக்களிடம் எழுந்துள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!