குன்னூர் அருகே பெண்ணை துரத்திய கரடியால் பரபரப்பு

குன்னூர் அருகே பெண்ணை துரத்திய கரடியால் பரபரப்பு
X

கேத்தி பகுதியில் வயதான பெண்ணை பின் தொடர்ந்து வந்து துரத்திய கரடி.

குன்னூர் அருகே கேத்தி கிராமத்தில் சாலையில் நடந்து சென்ற பெண்மணியை, கரடி விரட்டியதால் பரபரப்பு நிலவியது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் கோத்தகிரி பகுதிகளில் சமீபகாலமாக கரடிகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தேயிலை தோட்டங்களிலும் குடியிருப்பு பகுதிகளிலும் சர்வசாதாரணமாக உலா வருவதால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இந்நிலையில், குன்னூர் கேத்தி அருகே உள்ள முக்கட்டி கிராமத்தில், பகல் நேரத்தில் பொது மக்கள் வசிக்கும் பகுதிக்கு வந்த கரடி ஒன்று, சாலையில் நடந்து சென்ற வயதான பெண்ணை பின் தொடர்ந்து வந்தது இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

வயதான பெண், திரும்பிப் பார்த்து கரடி வருவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். ஒட முடியாமல் தவித்தார். இதனிடையே, அந்த கரடி, அருகில் உள்ள தேயிலை தோட்டத்திற்கு சென்றது. உடனடியாக அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர் இதன் பேரில் வனத்துறையினர் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு கரடியை கண்காணித்து வருகின்றனர். இச்சம்பவம் குன்னூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!