உக்ரைனில் உள்ள மகளை மீட்க பெற்றோர் கண்ணீருடன் வேண்டுகோள்

உக்ரைனில் உள்ள மகளை மீட்க  பெற்றோர் கண்ணீருடன் வேண்டுகோள்
X

ஷாயி ஷோனு.

விரைவில் தமிழக பிள்ளைகளை மீட்டு வர வேண்டும் என தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் ஆப்பிள் பீ பகுதியில் வசித்து வருபவர் ஷாயிநாத். இவரது மனைவி யுகேஷ்வரி. இவர்களின் மகள் ஷாயி ஷோனு 21. உக்ரைன் நாட்டில் வினிஷ்டா ப்ரெகவ் மெமோரியல் நேஷ்னல் மெடிக்கல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறார். தற்போது அங்கு போர் நடைபெற்று வருவதால் இந்திய மாணவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

தினந்தோறும் தரை தளத்தில் தங்கி வருகின்றனர். மாணவர்கள் அச்சத்துடனே வாழ்ந்து வருகின்றனர். கல்லூரி நிர்வாகம் சார்பில் இன்று முதல் அடுத்த பதினைந்து தினங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தற்போது தமிழக அரசு, தமிழக மாணவர்களை மீட்டு வரும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது.

இது குறித்து மாணவியின் பெற்றோர் கூறுகையில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் எடுக்காத ஒரு முடிவை தமிழக முதல்வர் எடுத்துள்ளார். மாணவர்களை மீட்டு வரும் செலவை தமிழக அரசு ஏற்கும் என்று தெரிவித்துள்ளார். அதற்கு மிக்க நன்றி தெரிவித்துள்ளனர். ஒன்றிய அரசு எடுக்காத ஒரு நடவடிக்கையை தமிழக அரசு எடுத்துள்ளது. விரைவில் தமிழக பிள்ளைகளை மீட்டு வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
ai in future education