ஒரே வாரத்தில் எகிறிய தேயிலை துாள் விலை; உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி
குன்னுாரில் தேயிலை துாள் மொத்த வருமானத்தில், இந்த வாரம் 2.61 கோடி ரூபாய் அதிகரித்தது.
நீலகிரி மாவட்டம் குன்னுார் தேயிலை ஏல மையத்தில் நடப்பாண்டின் 32வது தேயிலை ஏலம் நடந்தது. அதில் 16.10 லட்சம் கிலோ இலை ரகம்; 5.10 லட்சம் கிலோ 'டஸ்ட்' ரகம் என மொத்தம் 21.20 லட்சம் கிலோ தேயிலை துாள் ஏலத்துக்கு வந்தது.அதில் 14.14 லட்சம் கிலோ இலை ரகமும், 4.64 லட்சம் கிலோ டஸ்ட் ரகம் என 18.78 லட்சம் கிலோ விற்பனையானது; 16.51 கோடி ரூபாய் மொத்த வருமானம் கிடைத்தது. சராசரி விலை கிலோவுக்கு 87.93 ரூபாயாக இருந்தது.
ஒரே வாரத்தில் 1.61 லட்சம் கிலோ வரத்து அதிகரித்தது. கடந்த வாரம் நடந்த 31வது ஏலத்தை விட இந்த ஏலத்தில் 2 லட்சத்து 96 ஆயிரத்து 826 கிலோ கூடுதலாக விற்று ஏற்றம் கண்டது.ஒரே வாரத்தில் 2.61 கோடி ரூபாய் மொத்த வருமானம் அதிகரித்துள்ளதால் தேயிலை துாள் உற்பத்தியாளர்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu