கோத்தகிரி தேயிலை தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து

கோத்தகிரி தேயிலை தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து
X

தீவிபத்தில் சேதமடைந்த தேயிலை தொழிற்சாலை.

தீ விபத்து குறித்து தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோத்தகிரியில் இருந்து சுமார் 7 கிமீ தொலைவில் அமைந்துள்ளது கப்பட்டி கிராமம். இங்கு தனியார் ஆரஞ்சு வேலி தேயிலை தொழிற்சாலை இயங்கி வருகிறது. இத்தொழிற்சாலையில் இரவு நேர தேயிலை அரைக்கும் பணியின் போது ஆறு பேர் பணி செய்துள்ளனர்.

இந்நிலையில் நள்ளிரவில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் தீயானது மளமளவென தொழிற்சாலை முழுவதும் எரியத் தொடங்கியது. உடனே இரவு நேர பணியில் இருந்த பணியாளர்கள் உடனே தீயணைப்பு துறையினருக்கும், காவல்துறைக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.

உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் தீயை அணைக்கும் பணியை மேற்க் கொண்டு சுமார் 4 மணி நேர போராட்டத்திற்கு பின் தீ அணைக்கப்பட்டது. ஆனால் தேயிலை தொழிற்சாலை முற்றிலுமாக எரிந்து சேதமடைந்தது. இது தொடர்பாக தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சமபவம் தொழிற்சாலையில் தேயிலை தூள் தயாரிக்கும் போது பயன்படுத்தப்படும் அடுப்பில் இருந்து தீ பரவியதா அல்லது மின்கசிவு காரணமாக தீ பற்றி எரிந்துள்ளதா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர். அதிர்ஷ்டவசமாக குறைந்த எண்ணிக்கையில் பணியாளர்கள் பணி செய்ததால் அனைவரும் எவ்வித பாதிப்பும் இன்றி தொழிற்சாலையை விட்டு உடனே வெளியேறி விட்டனர்.

Tags

Next Story
ai solutions for small business