குன்னூரில் நோய் தடுப்பு குறித்து ஆய்வுக் கூட்டம்

குன்னூரில் நோய் தடுப்பு குறித்து ஆய்வுக் கூட்டம்
X

கொரோனா தொற்று தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு கூட்டம்.

அரசு தெரிவித்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக கடைப்பிடிக்கிறார்களா என தொடர்ந்து அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும்.

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்று தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் குன்னூர் இன்கோசர்வ் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் அம்ரித் முன்னிலை வகித்தார். சுற்றுப்புறசூழல், காலநிலை மாற்றம் மற்றும் வன கூடுதல் தலைமை செயலாளர், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சுப்ரியா சாஹூ தலைமை தாங்கி பேசினார்.

அவர் பேசும்போது, நீலகிரி மாவட்டத்தில் நோய் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், ஜிங்க் மற்றும் வைட்டமின் மாத்திரைகளை வழங்க வேண்டும். அப்பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். லேசான அறிகுறிகளுடன் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டவர்களை, அவர்களது உடல்நலம் குறித்து மாவட்ட அளவில் அமைக்கப்பட்ட வார் ரூம் மூலம் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

நீலகிரியில் 4 நகராட்சிகள், 4 ஊராட்சி ஒன்றியங்கள், மற்றும் 11 பேரூராட்சிகளில் அமைக்கப்பட்ட மைக்ரோ வார் ரூம் மூலமாகவும் உள்ளாட்சித்துறை அலுவலர்கள் மூலமாகவும் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். முககவசம் அணியாமல் வெளியே வரும் நபர்களுக்கு உடனடியாக அபராதம் விதிக்க வேண்டும்.

தகுதி வாய்ந்த அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க வேண்டும். அரசு தெரிவித்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக கடைப்பிடிக்கிறார்களா என்று தொடர்ந்து அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும். விதிமுறைகளை பின்பற்றாத வணிக நிறுவனங்களுக்கு உடனடியாக அபராதம் விதிக்க வேண்டும் என்றார்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil