குன்னூரில் குடியிருப்பில் புகுந்த கரடிகளால் பரபரப்பு

குன்னூரில் குடியிருப்பில் புகுந்த கரடிகளால் பரபரப்பு
X

வீட்டுக்குள் புகுந்த கரடி.

குடியிருப்புகளுக்குள் அடிக்கடி கரடிகள் புகுந்து சேதம் ஏற்படுத்தி வருவதால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்

குன்னூர் அருகே சின்ன உபதலை கிராமத்துக்குள் நள்ளிரவில் 2 கரடிகள் புகுந்தன. ஒரு வீட்டுக்குள் புகுந்த கரடி உணவு பொருட்கள் ஏதேனும் உள்ளதா என்று தேடியது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் சத்தம் போட்டபடி வீட்டின் கதவை திறந்து வெளியே வந்தனர். வீட்டுக்குள் சென்ற கரடி வெளியே ஓடி வந்தது. பின்னர் 2 கரடிகளும் அங்கிருந்து சென்றன. குடியிருப்புகளுக்குள் அடிக்கடி கரடிகள் புகுந்து சேதம் ஏற்படுத்தி வருவதால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!