கோத்தகிரியில் மாநில அளவிலான கைப்பந்து போட்டி: நாகர்கோவில் அணி முதலிடம்

கோத்தகிரியில் மாநில அளவிலான கைப்பந்து போட்டி: நாகர்கோவில் அணி முதலிடம்
X

மாநில அளவிலான கைப்பந்து போட்டியில் கோப்பையை வென்ற நாகர்கோவில் அணி.

நாகர்கோவில் அணி தங்களின் சிறப்பான ஆட்டத்தால் முதல் 2 சுற்றுகளை கைப்பற்றி சாம்பியன் பட்டத்தை வென்றது.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் கோத்தகிரி கைப்பந்தாட்ட கழகம் மற்றும் ஜோகி கவுடர் நினைவு சார்பில் பத்தாம் ஆண்டு மாநில அளவிலான கைப்பந்து போட்டி நடைப்பெற்றது.

இதில் மாநிலத்தில் உள்ள தலைசிறந்த அணிகளான 50 க்கும் மேற்ப்பட்ட தலைசிறந்த அணிகள் பங்கேற்றன. ஒவ்வொரு அணிக்கும் தலா 3 செட்டுகள் என மூன்றில் இரண்டடில் வெற்றி என்ற இலக்கில் களமிறங்கிய கைப்பந்தாட்ட அணிகள் தங்களின் விளையாட்டு திறனை மெய்பித்தனர்.

இரண்டு நாட்களாக நடைபெற்ற இரவு பகல் கைப்பந்தாட்டத்தில் நீலகிரி மாவட்டத்தின் தலைசிறந்த அணிகள், வெளி மாவட்ட தலைசிறந்த அணிகள் நாக் அவுட் முறையில் விளையாடி காலிறுதி, அரையிறுதி, இறுதி போட்டிக்கு தகுதி பெற்று இறுதி போட்டிக்கு சென்னை அணியும், நாகர் கோவில் அணியும் தகுதி பெற்றது.

இதில் முதல் இரண்டு சுற்றுகளில் தங்களின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நாகர்கோவில் அணி தங்களின் சிறப்பான ஆட்டத்தால் முதல் இரண்டு சுற்றுகளையுமா கைப்பற்றி சேம்பியன் பட்டத்தை வென்று ரொக்கம் மற்றும் சுழற்கோப்பையையும் தட்டி சென்று கைப்பற்றியது. சென்னை அணி இரண்டாம் பரிசை கைப்பற்றியது.

மேலும் தலைசிறந்த கைப்பந்தாட்ட விளையாட்டு வீரர்களுக்கு ஆட்டநாயகன்,தொடர் ஆட்ட நாயகன் கேடயம் மற்றும் ரொக்கம் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.

இவ்விழாவில் நீலகிரி மாவட்ட பா.ஜ.க வின் பொதுச் செயலாளர் குமார், கைப்பந்தாட்ட கழக நிர்வாகிகள் மற்றும் கோத்தகிரி கைப்பந்தாட்ட ரசிகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil