அக்டோபர் 2 ம் தேதி சிறப்பு மலை ரயில் இயக்கம்

மலை ரயில் (பைல் படம்).
இயற்கை எழில் கொஞ்சும் நீலகிரி மலைகளின் இடையே நூற்றாண்டு காலமாக இயங்கும் ரயிலில் பயணம் செய்வது தங்களின் வாழ்நாளில் ஒரு நாளாவது இருக்க வேண்டும் என்பது சர்வதேச அளவில் மக்களின் எண்ணமாக உள்ளது. நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் நிச்சயம் இதில் செல்ல ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கொரோனா பாதிப்பால் நிறுத்தப்பட்டிருந்த மலை ரயில் கடந்த இரு வாரங்களாக இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால், மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் மற்றும் ஊட்டி இடையே இயங்கும் மலை ரயிலில் ஆர்வத்துடன் பயணம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டிக்கு வரும் அக்டோபர் 2ம் தேதி, சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்தியாவின் 75 வது சுதந்திர தினத்தை நினைவுகூரும் வகையில், 'ஆசாதி கா அமிர்த மஹோத்ஸவ்' என்ற நிகழ்வுகளின் ஒரு பகுதியாக, இந்தியாவின் 75 ஆண்டுகால சாதனைகள் நமது நாட்டின், கலாச்சாரம் மற்றும் சாதனைகளின் புகழ்பெற்ற வரலாற்றைக் கொண்டாடுவதற்கும் நினைவு கூருவதற்கும் இந்த சிறப்பு மலை ரயில் இயக்க ரயில்வே வாரியம் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு ரயில் மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 09.10 மணிக்கு புறப்பட்டு குன்னூருக்கு பிற்பகல் 12.30 மணிக்கு வந்தடையும். 02.10.2021 அன்று. குன்னூரில் ரயிலுக்கு ஒரே ஒரு நிறுத்தம் இருக்கும். பகல் 12.55 மணிக்கு குன்னூரில் இருந்து புறப்பட்டு ஊட்டிக்கு மதியம் 2.25 மணிக்கு சென்று அடையும். இந்த ரயிலில் 4 முதல் பெட்டிகள், மொத்தம் 72 முதல் வகுப்பு இருக்கைகள் மற்றும் 100 இரண்டாம் வகுப்பு இருக்கைகள் வழங்கப்படும்.
மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னூர் வரை -முதல் வகுப்பில் ரூ .1100; இரண்டாம் வகுப்பில் ரூ .800 எனவும் மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டி வரை -முதல் வகுப்பில் ரூ .1450; இரண்டாம் வகுப்பில் ரூ .1050 எனவும் நிர்ணயிக்ப்பட்டுள்ளது. குன்னூரில் இருந்து ஊட்டி வரை-முதல் வகுப்பில் ரூ .550; இரண்டாம் வகுப்பில் ரூ .450 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பயணம் செய்வதற்காக முன்கூட்டியே முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu