குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் உலா வரும் ஒற்றை யானை: வாகன ஓட்டிகள் அச்சம்
மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் உலா வரும் ஒற்றை யானை.
நீலகிரி மாவட்டம் மேட்டுப்பாளையம் குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் பர்லியார் பகுதியில் சாலையில் நடுவே ஒற்றையானை நடந்து வந்தது. இதைக் கண்ட வாகன ஓட்டிகள் வாகனங்களை நிறுத்தி அச்சத்துடன் பார்த்தனர். இந்த வீடியோ பதிவை வாகன ஓட்டி கைப்பேசி மூலம் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளார். பகல் நேரங்களில் பிரதான சாலையில் வனவிலங்குகள் உலா வரும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்று வட்டார பகுதிகளான பர்லியார், மரப்பாலம், புதுக்காடு பழங்குடியினர் கிராமம், போன்ற பகுதிகளில் அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான தோட்டங்களில் ஏராளமான பலா மரங்கள்,பழங்கள்,மூங்கில்கள் உள்ளன. நீலகிரியில் தற்போது பனிகாலம் முடிந்து இதமான கால நிலை நிலவுவதால் குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் யானைகள் அடிக்கடி சாலையில் வருவதால் வாகன ஓட்டிகள் பெரும் அச்சத்துடன் வாகனம் ஓட்ட வேண்டிய உள்ளது.
இந்த பதிவை குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் போது பேருந்தில் பயணம் செய்த காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் அதிகப்படியான வாகனங்கள் இந்த சாலையில் பயணித்து வருவதால் பகல் மற்றும் இரவு நேரத்தில் இந்த சாலையில் வாகனங்களில் பயணிக்கும் போது மிகவும் கவனமுடன் இருக்க வேண்டுமென வனத்துறையினர் கூறிவருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu