குன்னூரில் பள்ளி மாணவிக்கு கத்தி குத்து: வாலிபர் கைது

குன்னூரில் தனியார் பள்ளிக்கு சென்ற 12 ஆம் வகுப்பு மாணவியை கத்தியால் குத்திய வாலிபர் ஆசிக்கை பொதுமக்கள் மடக்கி பிடித்து கட்டி வைத்தனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் தனியார் பள்ளிக்கு சென்றுக் கொண்டிருந்த 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு மூன்று இடங்களில் கத்திக்குத்து. குன்னூர் அரசு மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை. கத்தியால் குத்தியவனை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு. காவல் துறை விசாரனை
நீலகிரி மாவட்டம் குன்னூர் நகரப் பகுதியான ஒய்எம்சியே அருகில் இயங்கி வரும் தனியார் பள்ளிக்கு சென்றுக் கொண்டிருந்த 12ம் வகுப்பு மாணவியை பின் தொடர்ந்து சென்ற வாலிபர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாணவியின் தலை, மார்பு, வயிறு என மூன்று இடங்களில் குத்தியதில் மாணவி அலறிய சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து வாலிபனை பிடித்து கைகால் கட்டி மேல் குன்னூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். மாணவியை குன்னூர் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்று சிகிச்சையளித்து வருகின்றனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வாலிபரை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரித்த போது, குன்னூரை சேர்ந்த அப்பாஸ் என்பவரின் மகன் ஆசிக் (26) என்பதும், இவன் மது, கஞ்சா போன்றவைகளுக்கு அடிமை என்றும் மாணவியை ஒருதலைப்பட்சமாக காதலித்து வந்ததாகவும் தெரியவந்தது. இதுகுறித்து மேல் குன்னூர் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இன்று காலையில் பள்ளிக்கு சென்றுக்கொண்டிருந்த மாணவியை வாலிபர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu