குன்னூரில் கனமழையால் சிம்ஸ் பூங்காவில் அழுகும் நிலையில் பூக்கள்!

குன்னூரில் கனமழையால் சிம்ஸ் பூங்காவில் அழுகும் நிலையில்  பூக்கள்!
X

அழுகும் நிலையில் சிம்ஸ் பூங்கா பூக்கள்

குன்னூர் கன மழையால் சிம்ஸ் பூங்காவில் உள்ள பூக்கள் அனைத்தும் அழுகும் அவலம் ஏற்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் குன்னூரில் சுற்றுலா தலங்களில் மிக முக்கியமான தலங்களில் ஒன்றாக சிம்ஸ் பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் ஜனவரி முதல் வாரத்தில் கோடை சீசனுக்கு சுமார் 3.10 லட்சம் பல்வேறு மலர் நாற்றுகள் மற்றும் விதைகள் நடவு செய்யப்பட்டது. இந்த நிலையில் தற்போது பூங்காவில் உள்ள மலர்கள் அனைத்தும் பூக்க துவங்கியுள்ளது.

ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் வந்து செல்லும் நிலையில் தற்போது கொரோனா வைரஸ் காரணமாக சுற்றுலா பயணிகள் வர தடை உத்தரவு அமலில் உள்ளதால் பூங்கா பொலிவிழந்து காணப்பட்டுவந்தது‌.

தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால் பூக்கள் அனைத்தும் அழுக துவங்கியுள்ளது. பல மாதங்கள் சிரமம் அடைந்து பூக்களை பராமரித்து தற்போது யாரும் பார்க்க முடியாமல் அழுகி போவதை கண்டு பூங்கா ஊழியர்கள் கவலையடைந்துள்ளனர்.

Tags

Next Story
ai in future agriculture