காட்டு பூனை தலையில் மாட்டிய பிளாஸ்டிக் டப்பா அகற்றம்

காட்டு பூனை தலையில் மாட்டிய பிளாஸ்டிக் டப்பா அகற்றம்
X

தலையில் பிளாஸ்டிக் பாட்டிலுடன் காணப்படும் காட்டு பூனை.

டால்பின் நோஸ் அருகே தேயிலை தோட்டத்தில் தலையில் பிளாஸ்டிக் டப்பா மாட்டிய நிலையில் இருந்த காட்டு பூனை வனத்தில் விடப்பட்டது.

குன்னூர் சுற்றுப் பகுதிகளில் சிறுத்தை காட்டெருமை காட்டுப்பூனை உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டம் சமீபகாலமாக அதிகரித்துள்ளது. கடந்த மாதம் குன்னூர் பஸ் நிலையம் அருகே டீ கடைக்குள் புகுந்த காட்டு பூனை மீட்கப்பட்டு வனப்பகுதிக்குள் விடப்பட்டது.

இந்நிலையில் குன்னூர் டால்பின் நோஸ் சிங்காரா எஸ்டேட் பகுதியில் இன்று தலையில் பிளாஸ்டிக் டப்பா மாட்டிய நிலையில் காட்டுப் பூனை இருந்துள்ளது. இதனையடுத்து உடனே அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பின்பு சம்பவ பகுதிக்கு வந்த வனத்துறையினர் காட்டுப் பூனையின் தலையில் மாட்டியிருந்த பிளாஸ்டிக் டப்பாவை அகற்றி பத்திரமாக வனப்பகுதிக்குள் விட்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!