கனமழை எதிரொலியாக அபாயகரமான மரங்கள், கிளைகள் அகற்றம்

கனமழை எதிரொலியாக அபாயகரமான மரங்கள், கிளைகள் அகற்றம்
X

பைல் படம்.

நீலகிரியில் 100 இடங்களில் மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நீலகிரி மாவட்டத்தில் 13-ந் தேதி முதல் நாளை (செவ்வாய்க்கிழமை) வரை அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. வடகிழக்கு பருவமழை தொடங்கி பரவலாக பெய்து வருகிறது. தேசிய, மாநில நெடுஞ்சாலை ஓரங்களில் விழும் நிலையில் உள்ள அபாயகரமான மரங்களின் கிளைகள் வெட்டி அகற்றப்பட்டு வருகின்றன.

உதகை-கோத்தகிரி சாலை, குன்னூர்- கோத்தகிரி சாலையில் அபாயகரமான மரங்களின் கிளைகள் அகற்றப்பட்டது. அதேபோல் மின்கம்பிகள், மின் கம்பங்கள் அருகே உரசி கொண்டிருக்கும் மரக்கிளைகள் வெட்டி அகற்றப்படுகிறது. நீலகிரியில் 100 இடங்களில் மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!