ஹெலிகாப்டர் விழுந்த இடத்தில் 3 ம் நாளாக சீரமைப்பு பணி

ஹெலிகாப்டர் விழுந்த இடத்தில் 3 ம் நாளாக சீரமைப்பு பணி
X

பைல் படம்.

குன்னூர் காட்டேரி பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளான பகுதியில் 3 ம் நாளாக மரங்கள், பொருட்களை அப்புறபடுத்தும் பணி தீவிரம்.

கடந்த 8ஆம் தேதி சூலூரில் இருந்து புறப்பட்ட ராணுவ ஹெலிகாப்டர் குன்னூர் காட்டேரி நஞ்சப்பசத்திரம் எனும் பகுதியில் மேகமூட்டம் காரணமாக விபத்துக்குள்ளானது. இந்த ஹெலிகாப்டரில் பயணம் செய்த முப்படை தளபதி பிபின் ராவத் அவரது மனைவி உட்பட 14 பேர் பயணம் செய்த இதில் மொத்தம் 13 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக ஹெலிகாப்டர் விழுந்த இடத்தில் உள்ள உதிரி பாகங்கள் மற்றும் மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் தீயணைப்புத்துறையினர் ராணுவத்தினர், அனைவரும் ஈடுபட்டு வருகின்றனர். இன்றுடன் மூன்றாவது நாளாக விபத்து நடந்த இடத்தில் தமிழக காவல்துறை அதிகாரிகளும், ராணுவ அதிகாரிகளும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர் .

மேலும் வனப்பகுதியில் ஹெலிகாப்டர் விழுந்து உள்ளதால் உதிரிபாகங்கள் வனப்பகுதியில் விழுந்து உள்ளனவா என தேடும் பணியும் நடந்து வருகிறது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!