மீண்டும் மலை ரயில் சேவை ரத்து: ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு

மீண்டும் மலை ரயில் சேவை ரத்து: ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு
X

மலை ரயில்.

டிச 21 ஆம் தேதி வரை மலை ரயில் பாதை சீரமைப்பு பணிக்காக சேவை ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

நீலகிரி மலை ரயில் பாதையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழை காரணத்தினால் மலை ரயில் பாதையில் மண்சரிவு மற்றும் பாறைகள் உருண்டு விழுந்ததால் 14.12.21 வரை சீரமைப்பு பணிக்காக மலை ரயில் சேவை ரத்து செய்து, ரயில்வே நிர்வாகம் அறிவித்தது.

இதையடுத்து இன்றுடன் சீரமைப்பு பணி நிறைவடைந்து 15.12.21 ரயில் சேவை துவங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் ரயில்வே நிர்வாகம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தொடர் மழை காரணமாக மலை ரயில் பாதையில் ஆங்காங்கே மண்சரிவு பாறைகள் உருண்டு விழுந்ததால் சீரமைப்பு பணிகள் தற்போது வரை நடைபெற்று வருகிறது.

மேலும் பல இடங்களில் மண்சரிவு ஏற்படும் இடங்கள் கண்டறிந்து, அதை முன்கூட்டியே சரி செய்து பாதுகாப்பு ஏற்படுத்தும் வகையில் அப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எதிர்வரும் 21 ஆம் தேதி வரை மலை ரயில் பாதையில் சீரமைப்பு பணிக்காக மீண்டும் ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!