கோத்தகிரியில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை

கோத்தகிரி தாசில்தார் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், நேற்றிரவு திடீர் சோதனை மேற்கொண்டனர்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி தாலுகாவிற்கு உட்பட்ட தாசில்தார் அலுவலகத்திற்கு பட்டா மாற்றம், சிட்டாவில் பெயர் சேர்த்தல், அனுபோகச்சான்று, நில உரிமைச் சான்று, நில உட்பிரிவு செய்தல் மற்றும் பல்வேறு சான்றிதழ்கள் பெற, ஏராளமான பொதுமக்கள் தினந்தோறும் வந்து செல்கின்றனர்.

தற்போது கூட்டுறவு வங்கிகளில் விவசாய கடன் பெறுவதற்காக வட்டாட்சியர் கையொப்பத்துடன் கூடிய அனுபோகச் சான்று பெற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், அனுபோகச் சான்றிதழ் வழங்குவதற்காக அதிகாரிகள், பல ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெறுவதாகவும், இதனை சாதகமாக பயன்படுத்தி இடைத்தரகர்கள் பொதுமக்களிடம் இருந்து பணத்தை பெற்று அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து வருவதாகவும், நீலகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறைக்கு தொடர்ந்து புகார்கள் வந்ததாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, கடந்த சில நாட்களாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கோத்தகிரி தாசில்தார் அலுவலகத்தைக் கண்காணித்து வந்தனர். அதை தொடர்ந்து நேற்றிரவு லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Tags

Next Story
ai in future agriculture