குன்னூர் ஜெகதளா பேரூராட்சி அலுவலகத்தில் ரெய்டு

குன்னூர் ஜெகதளா பேரூராட்சி அலுவலகத்தில் ரெய்டு
X

 ஜெகதளா பேரூராட்சி அலுவலகம்.

லஞ்ச ஒழிப்பு துறையினர் நடத்திய சோதனையில் 4 லட்சத்து 53 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

நீலகிரி மாவட்டம், குன்னூர் ஜெகதளா பேரூராட்சியில் விதிமீறிய கட்டடங்கள் அதிகளவில் கட்டப்பட்டு வருகிறது. மேலும் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும் வந்த புகாரின அடிப்படையில் அலுவலகத்தில், நீலகிரி மாவட்ட ஒழிப்பு துறையினர் திடீர் சோதனை நடத்தினர்.

இந்த தகவலின் பேரில், நீலகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி., சுபாஷினி தலைமையிலான லஞ்ச ஒழிப்பு துறையினர் இன்று அலுவலகத்தில் திடீர் சோதனை செய்தனர்.

இதில் கணக்கில் வராத 4 லட்சத்து 53 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதில் இல்லாத மகளிர் குழுக்கள் பெயரில் பல லட்சங்கள் மோசடி நடந்துள்ளது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!