/* */

அறநிலையத்துறையை கண்டித்து கோத்தகிரியில் படுகர் இன மக்கள் ஆர்ப்பாட்டம்

இந்து சமய அறநிலையத்துறை உடனடியாக பாரம்பரிய கோயிலை மீட்கும் நடவடிக்கையை கைவிடக்கோரி, கோத்தகிரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

அறநிலையத்துறையை கண்டித்து கோத்தகிரியில் படுகர் இன மக்கள் ஆர்ப்பாட்டம்
X

கோத்தகிரி அருகே பெத்தளா கிராமத்தில், இந்து அறநிலையத்துறை கண்டித்து உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற்றது. 

கோத்தகிரி அருகே பெத்தளா கிராமத்தில், குலதெய்வமான எத்தையம்மனை, படுகர் இன மக்கள் ஆண்டாண்டு காலமாக வழிபட்டு வருகின்றனர். இந்து சமய அறநிலையத்துறை சார்பில், இந்த கோயிலை தங்கள் கட்டுப்பாட்டில் எடுப்பதற்காக அறிவிப்பு பலகை கொண்டு வந்து வைக்கப்பட்டுள்ளது.

இதனால், கிராம மக்கள் ஆவேசமடைந்தனர். முதற்கட்டமாக நேற்று, இந்து சமய அறநிலையத்துறையின் நடவடிக்கையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு உறுதுணையாக இருந்த நடுஹட்டி கைகாரு தலைவர் நஞ்சன் என்பவரை உடனடியாக பதவியில் இருந்து விலகக் கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

அதனைத்தொடர்ந்து, இன்று உண்ணாவிரத போராட்டட்தை படுகர் இன மக்கள் நடத்தி வருகின்றனர். மழையையும் பொருட்படுத்தாமல் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். மேலும் கலாச்சார பாடல்களை பாடி, உண்ணாவிரதம் மேற்கொண்டனர் .ஒரு சில பெண்கள், உண்ணாவிரத இடத்தில் மயங்கி விழுந்தனர். தங்களது கலாச்சாரத்தை ஒடுக்கும் நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்; உடனடியாக பாரம்பரிய கோயிலை மீட்கும் நடவடிக்கையை இந்து அறநிலையத்துறை கைவிடுட வேண்டும் என்று, கோரிக்கை விடுத்தனர்.

Updated On: 11 Oct 2021 10:12 AM GMT

Related News

Latest News

  1. திருச்சிராப்பள்ளி
    மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்; அரசு மரியாதையுடன்...
  2. லைஃப்ஸ்டைல்
    நீரிழிவு நோயாளிகள் நிலக்கடலை சாப்பிடலாமா? தெரிஞ்சுக்கங்க..!
  3. கோவை மாநகர்
    கோவையில் மழை வேண்டி சிறப்பு தொழுகை: மரக்கன்றுகள் வழங்கிய தமுமுக
  4. ஈரோடு
    மே தினத்தில் விடுமுறை அளிக்காத 81 நிறுவனங்கள் மீது வழக்கு
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  9. ஈரோடு
    பவானி அருகே சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்த அரசுப் பேருந்து
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்