குன்னூரில் வாக்கு சாவடிகள் அதிகரிப்பு

குன்னூரில் வாக்கு சாவடிகள் அதிகரிப்பு
X
கொரோனா காரணமாக குன்னூரில் இதுவரை 38 ஆக இருந்த வாக்கு சாவடிகள் தற்போது கூடுதலாக18 வாக்குசாவடிகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளது.

குன்னூரில் உள்ள 38 வாக்குச் சாவடி மையங்கள் செயல்பட்டு வந்த நிலையில், கொரோனா பாதிப்பு காரணமாக கூடுதலாக 18 வாக்கு சாவடி மையங்களை அதிகப்படுத்தும் பணியில் வருவாய் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் இதற்கான பணிகளில் அரசு அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பொதுமக்கள் வாக்களிப்பதற்காக அங்கன்வாடி மையங்கள், அரசு மற்றும் தனியார் பள்ளிகள் போன்ற இடங்களை தூய்மை படுத்தும் பணியில் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த தேர்தலின் போது 38 வாக்கு சாவடி மையங்கள் மட்டுமே செயல்பட்டு வந்தது. ஆனால் தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக வாக்கு சாவடிகளில் அதிகளவிலான பொதுமக்கள் கூடுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாலும், இதனால் எளிதில் தொற்று பரவும் அபாயம் ஏற்படும் என்பதாலும் கூடுதலாக 18 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு, ஆண்கள் மற்றும் பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட வாக்கு சாவடிகள் பிரிக்கும் நடவடிக்கையில் வருவாய் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இதே போல் அடுத்தகட்டமாக ஊராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளை ஆய்வு மேற்கொண்டு கூடுதலான வாக்கு சாவடிகள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

Tags

Next Story
ai robotics and the future of jobs