குன்னூரில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் பறிமுதல்

குன்னூரில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் பறிமுதல்
X

குன்னூரில், தடையை மீறி விற்பனைக்காக எடுத்து வந்த குடிநீர் பிளாஸ்டிக் பாட்டிலை, அதிகாரிகள் பறிமுதல் செய்து 5000 ரூபாய் அபராதம் விதித்தனர்,

குன்னூரில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டது.

நீலகிரியில், ஒருமுறை பயன்படுத்தும் கப், குடிநீர் மற்றும் குளிர்பானங்கள் அடைத்து விற்கப்படும் 'பிளாஸ்டிக்' பாட்டில்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆறு மாதங்களுக்கு முன், வன விலங்குகள் நலன் கருதி, பாலியஸ்டர் மற்றும் நைலான் பைகளை பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 21 வகையான பிளாஸ்டிக் பொருட்கள், பயன்படுத்த தடை உள்ளது. விதிகளை மீறி விற்போரை, அந்தந்த உள்ளாட்சி அமைப்பு நிர்வாகிகள் கண்காணித்து, வருகின்றனர்.

இந்நிலையில், இன்று குன்னூரில் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மருத்துவர் சுரேஷ் மற்றும் குன்னூர் நகராட்சி துப்புரவு ஆய்வாளர் மால் முருகன் உள்ளிட்ட குழுவினர், தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை சப்ளை செய்த நபரின் ஆட்டோவை, வெலிங்டன் காவல்துறை காவலர்கள் முன்னிலையில் பறிமுதல் செய்தனர். அத்துடன், தடையை மீறியதற்காக, ரூ 5000/- அபராதம் விதிக்கப்பட்டது. தடையை மீறி விற்பனை செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கபடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
ai in future agriculture