சுற்றுலா பயணிகள் வீசி செல்லும் பிளாஸ்டிக், கண்ணாடி பாட்டில்கள்

சுற்றுலா பயணிகள் வீசி செல்லும் பிளாஸ்டிக், கண்ணாடி பாட்டில்கள்
X

மதுபாட்டிலை குடிக்கும் குரங்கு.

வனப்பகுதியில் வீசிச் செல்லும் மதுபாட்டிலில் உணவு என என நினைத்து மதுவை குடிக்கும் குரங்கின் வீடியோ வேதனையடைச் செய்துள்ளது.

நீலகிரி மாவட்டத்திற்கு சமவெளிப் பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர். குறிப்பாக மலைப்பாதை வனப்பகுதியைக் கொண்டுள்ளதால், வன விலங்குகளின் நடமாட்டமும் காணப்படும் குறிப்பாக மலைப்பாதையில் ஏராளமான குரங்குகளும் சுற்றுலாப் பயணிகள் வீசிச் செல்லும் உணவுக்காக காத்திருக்கின்றன.

இந்நிலையில் உதகையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் கோத்தகிரி சாலையில் குரங்கு ஒன்று உணவு என நினைத்து பிளாஸ்டிக் பாட்டிலில் உள்ள தண்ணீரையும், மது பாட்டிலில் இருந்த மதுவையும் குடிக்கும் காட்சி அனைவரிடத்திலும் பெரும் வேதனையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மலை மாவட்டத்துக்கு வந்த செல்லும் சுற்றுலா பயணிகள் வனவிலங்கு பாதுகாப்பு கருதி பிளாஸ்டிக் பொருட்கள், கண்ணாடி பாட்டில்கள் உள்ளிட்டவைகளை வனப்பகுதியில் வீசி செல்வதை தவிர்க்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர் .

மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் சுற்றுலா பயணிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!