குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 1 லட்சத்து 70 ஆயிரம் நாற்றுகள் நடவு பணி தீவிரம்

இரண்டாம் கட்ட சீசனுக்காக குன்னூர் சிம்ஸ்பூங்காவில், 1 லட்சத்து 70 ஆயிரம் மலர் நாற்றுகளை நடவு செய்வதற்கான பணியில் பூங்கா ஊழியர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் கோடைசீசனையொட்டி செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் 2 ஆம் கட்ட சீசன் நடைபெறுவது வழக்கம். இதனை காண, லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் நீலகிரி மாவட்டத்திற்கு வருகை புரிவார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு காரணமாக கோடை சீசன் முழுமையாக ரத்து செய்யப்பட்ட நிலையில், சுற்றுலா பயணிகளின்றி அனைத்து சுற்றுலா தலங்களும் பொலிவிழந்து காணப்படுகின்றன.

தற்போது நீலகிரி மாவட்டத்தில் அரசுக்கு சொந்தமான பூங்காக்கள் விரைவில் திறக்க மாவட்ட நிர்வாகம் திட்டமிடப்பட்டுள்ளதால், குன்னூர் சிம்ஸ்பூங்காவில் உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளை சேர்ந்த சால்வியா, டேலியா, ஆன்தூரியம், மேரிகோல்டு உட்பட 200 வகைகளை சேர்ந்த, 1 லட்சத்து 70 ஆயிரம் மலர் நாற்றுகளை தயார் படுத்தும் பணியில் பூங்கா ஊழியர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

பூங்காவில் உள்ள புல்வெளிகளை சமன் செய்தல், வர்ணம் பூசுதல், மலர் செடிகளை பராமரிப்பு செய்தல் போன்ற பணிகளை தற்போது மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!