குன்னூரில் ஆதாம்-ஏவால் பழம் என அழைக்கப்படும் பெர்சிமென் பழ சீசன் துவங்கியது
பெர்சிமென் பழங்கள்
குன்னுாரில் ஆதாம் ஏவால் பழம் என அழைக்கப்படும் பெர்சிமென் பழ சீசன் துவங்கியது.நீலகிரி மாவட்டம், குன்னூர் தோட்டக்கலைத்துறை பழப்பண்ணை குன்னூர் சிம்ஸ் பார்க்கில் உள்ளது.
இந்த பழப்பண்ணையில் பல்வேறு வகையான பழமரங்கள் உள்ளன. இதில் குறிப்பாக ஜப்பான் நாட்டின் தேசிய பழமான பெர்சிமன் பழ மரங்கள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் பெர்சிமன் பழ சீசன் துவங்கும்.
இந்நிலையில் ஜூன் மாதத்திலேயே பெர்சிமென் பழ சீசன் துவங்கியுள்ளது. இந்த பழங்களை ஆதாம் ஏவால் பழம் என்றும் அழைக்கின்றனர். இந்த பழம் வைட்டமின்-ஏ, சி, சத்து நிறைந்த மருத்துவ குணம் வாய்ந்தது. கேன்சர் உள்ளவர்கள் இதனை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த பழங்களை பறித்து ஒரு நாள் முழுவதும் எத்தனால் திரவத்தில் ஊறவைத்து கழுவி அதன் பிறகே சாப்பிடவேண்டும். ஜூலை, ஆகஸ்டில் அதிகளவில் விளையும் என தோட்டக்கலை துறையினர் எதிர்பார்த்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu